அன்னூர்: சாலையூர், பழனி ஆண்டவர் கோவில் மண்டல பூஜை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னூர் அருகே சித்தர்கள் வழிபாடு செய்த, பழமையான பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. பல கோடி ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 1ம் தேதி இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து நந்தா தீபம் ஏற்றப்பட்டது. கடந்த 2ம் தேதி முதல் மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று சிறப்பு மண்டல பூஜை நடந்தது. பழனியாண்டவருக்கு பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அலங்கார பூஜை நடந்தது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.