பதிவு செய்த நாள்
20
பிப்
2023
04:02
அவிநாசி: விநாசி காந்திபுரத்தில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் 78வது நந்தா தீபக் குண்டம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நந்தா தீபம் ஏற்றுதல், அம்மன் சாட்டு விழா துவங்கியது. தொடர்ந்து மஹா சிவராத்திரியை முன்னிட்டு கொடியேற்றமும்,அலகு தரிசனமும் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நான்கு ரத வீதிகளிலில் சிம்ம வாகனத்தில், மயிலிறகு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளிய காட்சியுடன், பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நந்தா தீப குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கினர். நாளை இரவு வேடுபரி , பரிவேட்டை, தெப்பத்தேர் நிகழ்ச்சிகளும், நாளை மறுநாள் கொடியிறக்கம்,மஞ்சள் நீர் உற்சவம், பேச்சியம்மனுக்கு அபிஷேக பூஜை, 24ம் தேதி மஹாபிஷேகத்துடன் நந்தா தீப விழா உற்சவம் நிறைவு பெறுகின்றது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு,அங்காள பரமேஸ்வரி அறக்கட்டளை விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.