மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்த நல்லூரில் மயான கொள்ளை தேர் திருவிழாவில் தேரின் வடம் பிடித்து சுவாமியை வழிபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்த நல்லூரில் மாசி அமாவாசை அன்று அங்காள பரமேஸ்வரிக்கு தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இதேபோல் நேற்று அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு அம்மன் அலங்கரித்த தேறினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் பக்தர்கள் அம்மன்,காளி, சிவன், முருகன், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேஷங்களை போட்டுக் கொண்டு வீதியில் ஆடி சென்றனர். பின்பு அப்பகுதியில் உள்ள மயானத்தில் சூறை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு தீபாரதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.