பதிவு செய்த நாள்
22
பிப்
2023
12:02
சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலியில், நேற்று, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவிகளின் பரத நாட்டியம் நடந்தது. கடலுார் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 42ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா கடந்த 18ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளை சேர்ந்த நடன கலை ஞர்கள் பங்கேற்று, நாட்டிய அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நான்காம் நாளான நேற்று கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாணவிகளின் பரத நாட்டியம் நடந்தது. நாட்டியாஞ்சலி விழா இன்று நிறைவடைகிறது.
நாட்டியாஞ்சலியில் இன்று (22ம் தேதி) 6.00 6.20 பெங்களூரு, மனோஜ்னா நிருத்யா கலா மையம், மாணவர்கள் பரதம்
6.25 -6.45 கொல்கொத்தா கருணகேதன் பக்தா பரதம்
6.50 -7.10 சிதம்பரம் சிந்துஜா கிருஷ்ணராஜ் பரதம்
7.15- 7.45 நிறைவு விழா நிகழ்ச்சிகள் , தமிழக கவர்னர் ரவி பங்கேற்பு
7.50 -8.20 புனே, பூர்வா நிருத்ய ஆக்ருதி பள்ளி மாணவிகள் *கதக்"
8.25 - 8.50 பெங்களூரு, தரங் கலைக்கூடம் மாணவிகள் பரதம்
8:55 9.15 சிதம்பரம், தஞ்சை பரதகலா ஆடக சாலை, மாணவிகள் பரதம்
9.15 - 9.35 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாணவர்கள் பரதம்
9.40 10.20 தஞ்சாவூர் , பொய்க்கால் குதிரை, காவடி ஆட்டம். மயில் நடனம்.