Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி ... வளர்பிறை பஞ்சமி : பெரியநாயக்கன்பாளையம் வாராஹி கோவிலில் சிறப்பு பூஜை வளர்பிறை பஞ்சமி : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் அங்காளம்மன் தேரோட்டம் கோலாகலம் : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் அங்காளம்மன் தேரோட்டம் கோலாகலம் : பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

24 பிப்
2023
05:02

செஞ்சி:  மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த மாசி திருத்தேர் உற்சவத்தில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் (19ம் தேதி) அமாவசையன்று மயான கொள்ளையும், 22ம் தேதி மாலை தீமிதி விழாவும் நடந்தது. முக்கிய திருவிழாவான திருதிதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்தனர்.

ஐதீகம்: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின் படி பிரம்மஹத்தி தோஷத்தால் சக்தி இழந்த சிவபெருமன் காடு மலைகளில் சுற்றி திரிந்து கடும் பசியுடன் மகா சிவராத்திரியன்று இரவு மேல்மலையனுார் மயானத்திற்கு வந்து தங்குகிறார். மறுநாள் மயானத்தில் நடக்கும் மயான கொள்ளையின் போது பார்வதி தேவியின் அம்சமான அங்காளபரமேஸ்வரி விஸ்வரூபம் எடுத்து சிவனின் கரத்தை ஒட்டி கொண்டிருக்கும் பிரம்ம கபாலத்தை ஆட்கொள்கிறார். இதனால் சிவபெருமாம் பித்து தொளிந்து ஆனந்த தாண்டவமாடுகிறார். இந்நிகழ்ச்சியின் போது விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் அனைவரும் தேரின் பகங்களாக எடுக்கும் விழாவே இங்கு ஆண்டு தோறும் மாசி பெருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர் வடிவமைத்து திருவிழா நடந்துகின்றனர்.

வடம் பிடித்தல்: இன்று பகல் 1.50 மணிக்கு மேற்கு வாசலில் இருந்து புதிதாக வடிவமைத்த தேரை வடக்கு வாசலுக்கு கொண்டு வந்தனர். 2.20 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை தேரில் ஏற்றினர். 2.43க்கு மகா தீபாரதனையுடன் வடம் பிடித்தல் துவங்கியது. விழுப்புரம் கலெக்டர் பழனி வடம் பிடித்தலை துவக்கி வைத்தார். தேர் மாட வீதிகள் வழியாக பவனி வந்தது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். தேர் பவனியின் போது பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் நாணயங்களை வாரி இறைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

பாதுகாப்பு: டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி., ஸ்ரீநாதா மேற்பார்வையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடிவேல், ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு பஸ்: விழானை முன்னிட்டு சென்னை, புதுச்சேரி, கடலுார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர். பக்தர்கள் நடைபயணமாகவும், ஏராளமான வாகனங்களிலும் வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் நடந்து வரும் கோலாகலமான தீபாவளிக் கொண்டாட்டம், பக்தர்கள் மத்தியில் ... மேலும்
 
temple news
சென்னை:நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் கெட்டதுதான் கிடைக்கும். கடவுளிடம் இருந்து ... மேலும்
 
temple news
கங்கா ஸ்நானம் செய்ய நல்ல நேரம்: அதிகாலை 5.00 - 5.30மணி.அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடித்துச் சிதறும் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar