ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணத்தில் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் சந்தைதோப்பு அருகே உள்ள அங்காளம்மன் கோவில் மகா சிவராத்திரி உற்சவம் கடந்த ௧௮ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் உற்சவத்தில் 6 ம் நாள் உற்சவமான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது. நேற்று 7 ம் நாள் உற்சவமான தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் அர்ச்சனைகள் நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சிவலிங்கம் மற்றும், அங்காளம்மன் கோவில் தெரு வாசிகள்,முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.