பதிவு செய்த நாள்
01
மார்
2023
08:03
பழநி: பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நேற்று (பிப்.28.)ல் கொடியேற்றம் நடைபெற்றது.
பழநி, கோயில் நிர்வாகத்தின் உபகோயிலான மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்,.17ல் மூகூர்த்த கால் நடப்பட்டது. பிப்.,22, அதிகாலை மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள், கம்பத்திற்கு பால், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து வருகின்றனர். நேற்று (பிப்., 28) இரவு 7:25 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக அம்மன் உற்சவர் சிலை, கொடி மரத்தின் அருகே வைக்கப்பட்டது. சிறப்பு தீபாதரனை நடைபெற்றது. பழநியில் மாலையில் சாரல் மழை பெய்தது. மாரியம்மன் கோயில் முன் வைக்கப்பட்ட கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.இன்று மார்ச்.1ல் அடிவாரம், குமாரசத்திரம் அழகு நாச்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெறும். மார்ச்.,7 ல் மாலை 6:40 மணிக்கு மேல் மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்று, மார்ச்.,8 ல் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. மார்ச்.,9 கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது.