Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பழநி கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் நேற்று துவங்கியது பழநி கோயிலில் நாள் முழுவதும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாதசியன்று விரதமிருப்பதால் ஏற்படும் பலன்கள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 செப்
2012
11:09

கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரதமகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக வைகுண்ட ஏகாதசி விரதம் பலர் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும்.

மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு முக்கோடி (அளவற்ற) பலன்களைத் தருவதால், முக்கோடி ஏகாதசி என்றும் கூறுவர்.

ஏகாதசி விரத மகிமை : எமதர்மன் ஒருமுறை பெருமாளைச் சந்தித்தான். கருடவாகனத்தில் தனது உலகமான எமலோகத்திற்கு எழுந்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மகாவிஷ்ணுவும் ஒப்புக்கொண்டு வந்தார். அவரை எமதர்மன் மகிழ்ச்சியோடு வரவேற்றான். எமலோகத்தின் தெற்கு திசையில் இருந்து அழுகையும், கூக்குரலும் கேட்டது. குரல் கேட்ட திசை நோக்கி நடந்தார் பெருமாள். அங்கே, பாவிகள் சித்ரவதை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அன்று ஏகாதசி திதி. இன்று ஏகாதசி ஆயிற்றே! என்று வாய்விட்டு சொன்னார். அந்த நிமிஷமே அவர்களின் பாவம் அனைத்தும் நீங்கிவிட்டது. ஏகாதசி என்று சொன்னாலே பாவம் தீரும் என்றால், ஏகாதசி விரதமிருந்து பெருமாள் கோயிலுக்குப் போய் வந்தால் எவ்வளவு புண்ணியம் சேரும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஏகாதசியன்று செய்யக்கூடாதது: ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar