பதிவு செய்த நாள்
02
மார்
2023
03:03
மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் குஞ்சப்பண்ணை ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் குஞ்சப்பனை மகாமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் செய்து, புதுப்பிக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, 28 ம்தேதி காலை கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் தீபாரதனையுடன் துவங்கியது. விழாவில் இன்று 2ம் தேதி காலை, திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலசம் அமைத்தல், பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் வைபவம் நடைபெற்றது. மாலை மூன்றாம் கால யாக வேள்வி பூஜையும், மகா மாரியம்மனுக்கு, 1008 சகஸ்ர நாம அர்ச்சனையும், தீபாராதனையும், இரவு குஞ்சப்பனை மகா மாரியம்மனுக்கும், ஆதிமூலவருக்கும் யந்திர ஸ்தாபனம், அஷட்பந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற உள்ளன. மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை காலை, நான்காம் கால யாக வேள்வி பூஜையை தொடர்ந்து, நாடி சந்தானமும், யாக சாலையில் இருந்து, மூலவர் திருமேனிக்கு, அருள் சக்தியை ஏற்றுதல் ஆகியவை நடைபெற உள்ளது. காலை, 7:30 மணிக்கு தீர்த்த கலசங்கள் கோவிலை வலம் வந்து, கோபுர கலசத்திற்கும், மகாமாரியம்மனுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மூன்றாம் தேதியிலிருந்து, 12 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.