திருச்செந்தூரில் ஆவணி திருவிழா சுவாமி பச்சைசாத்தி வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2012 11:09
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் ஆவணிதிருவிழாவில் 8ம் நாளான நேற்று சுவாமி பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளிவீதிஉலா வந்தார். திருச்செந்தூர் ஆவணிதிருவிழாவில் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழவால் காலை,மாலை இரு வேளைகளில் சுவாமி அம்மன் தனித்தனி வானகங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் திருநாளில் சுவாமிக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. இந்நிலையில் 8ம் திருநாளான நேற்று காலை 5மணிக்கு பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி வீதிஉலா வந்து மேலக்கோவில் வந்துசேர்ந்தார். பின்னர் அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 10.30மணிக்கு மேல் பச்சைக்கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் வந்து சேர்ந்தார். விழாவில் ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு இன்று சுவாமி தங்க கையிலாய பர்வத வாகனத்திலும் அம்மன் வெள்ளிகமல வாகனத்திலும் எழுந்தருளிவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளைநடக்கிறது. காலை 7 மணிக்கு கன்யா லக்னத்தில் தேரோட்டம் துவங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமிதேர், அம்மன் தேர்கள் வீதிவலம் வந்து நிலையினை சேரும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்ஷன் ஆகியோர் செய்துள்ளனர்.