பதிவு செய்த நாள்
06
மார்
2023
10:03
அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த திருமுருகன் பூண்டியில் புகழ்பெற்ற அருள்மிகு திருமுருகநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவில் தேர் திருவிழா கடந்த 28 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 5 ம் தேதி மாலை திருமுருக நாதருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, யானை வாகன, அன்ன வாகன காட்சிகள் உள்ளிட்டவை நடைப்பெறுகிறது. இன்று 6 மற்றும் 7 ந் தேதி மாலை 3 : 00 மணிக்கு, திருமுருகநாதர் தேர் வடம் பிடித்தல், 8 ந் தேதி பரிவேட்டை குதிரை, சிம்ம வாகன காட்சிகள், தெப்பத்திருவிழா, உள்ளிட்டவை நடைப்பெறுகிறது. 9 ந் தேதி ஸ்ரீ சுந்தரர் வேடுபறி திருவிழா, 10 ம் தேதி பிரம்ம தாண்ட தரிசன காட்சி, 11ம் தேதி மஞ்சள் நீர் விழா, உள்ளிட்டவை நடைப்பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விமலா, தக்கார் பெரிய மருதுபாண்டியன், ஆகியோர் செய்து வருகின்றனர்.