பதிவு செய்த நாள்
07
மார்
2023
11:03
பந்தலூர்: பந்தலூர் அருகே குந்தலாடி ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், விளக்கு திருவிழா கடந்த பிப்., மாதம் 13 ம் தேதி காலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 19 நாட்கள் இரவு 8.30 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. கடந்த 4 ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. சிறப்பு பூஜைகள், மாலை 6 மணிக்கு, செண்டை மேளம், தப்பு தாளதங்களுடன் தாலப்பொலி ஊர்வலம், , தேவி, தேவர்கள் ஊர்வலம் நடந்ததது. இரவு கோவிலில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் வழங்கப்பட்டது. சிவராமன் குழுவினர் பங்கேற்ற செண்டை மேளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று ஏலம் விடுதல், கோவில் வலம் வருதல், நாட்டுப்புற கலைகள், குட்டிச்சாத்தான் தேவனின் கனலாட்டம், அம்மன் நீராட்டு,ஆயுத பூஜை, வழிபாடு பெறுதல் இடம்பெற்றது. கோலாட்டம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் நேற்று விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.