பதிவு செய்த நாள்
07
மார்
2023
11:03
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் உள்ள முத்து வேலம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த மார்ச் 4 முதல் காலை யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.
நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் காலம் யாகசாலை பூஜை, கோமாதா பூஜை, நாடி சந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நிறைவுக்கு பின்னர் காலை 10:30 மணி அளவில் முத்துவேல் அம்மன், ஆண்டி அய்யா, நாகநாதர், ராக்காச்சி அம்மன், குண்டாத்தி வீரன், கருப்பணசாமி, தர்ம முனீஸ்வரர், பட்டாணி தெய்வம், தொண்டடியான், காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு திருப்புல்லாணி பாபு சாஸ்திரிகள் குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் வழுதூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.