உறையூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடி திருவிழா: குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2023 01:03
திருச்சி: திருச்சி உறையூர் குழுமாயி அம்மன் குட்டிக்குடி திருவிழா வெகு சிறப்பாக நடந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரில் எழுந்தருளிய குழுமாயி அம்மனை தரிசனம் செய்தனர்.
திருச்சி புத்துார் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் பிரசித்தி பெற்ற குட்டிக்குடி திருவிழா நடைபெறும். விழாவையொட்டி, உய்யக்கொண்டான் கால்வாய் கரையில் உள்ள கோவிலில் இருந்து, ஓலைப் பிடாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளிய குழுமாயி அம்மனை, சப்பரத்தில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக புத்துார் மந்தைக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர். வழியெங்கும் திரண்டிருந்த பக்தர்கள் குழுமாயி அம்மனுக்கு மாவிளக்கு வைத்தும் அர்ச்சனை செய்தும் வழிபாடு நடத்தினர். காலை முதல், குழுமாயி அம்மனுக்கு பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் காத்திருந்தனர். மேள தாளங்கள் முழங்க, மருளாளி புத்துார் மந்தைக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மாவட்ட நிர்வாகம் சார்பில், அம்மனுக்கு வழங்கப்பட்ட ஆட்டுக்கிடாவின் கழுத்தை கடித்து, குட்டி குடித்தல் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் ரத்தத்தை குடித்து, மருளாளி அருளாசி வழங்கினார்.