பதிவு செய்த நாள்
09
மார்
2023
03:03
கூடலூர்: கூடலூர், சக்தி விநாயகர் கோவில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.
கூடலூர் சக்தி விநாயகர் கோயில் 37 ஆம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. தொடர்ந்து. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் கடைசி நாளான நேற்று காலை 5:00 மணி முதல் உத்திர நட்சத்திர வருஷாபிஷேகம், கும்ப பூஜை, யாக பூஜை, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மேளதாள வாத்தியங்கள், தாரை தப்பட்டை, செண்டை மேளம், பேண்ட் செட் வாக்கியத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் ஊர்வலம் துவங்கியது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். ஊர்வலம் மேல் கூடலூர் மாரியம்மன் கோயில், சுங்கம் முனீஸ்வரன் கோவில், எஸ்.எஸ்., நகர் நாகராஜா கோவில், துப்புகுட்டி பேட்டை சென்று வந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.