Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காந்திகிராமம் மாரியம்மன் கோயிலில் ... திருப்பரங்குன்றம் கோட்டை வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை திருப்பரங்குன்றம் கோட்டை வராஹி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி இரட்டை பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி இரட்டை பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 மார்
2023
04:03

செஞ்சி: செஞ்சி திருவண்ணாமலை சாலை இரட்டை பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சியில் திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள இரட்டை பிள்ளையார், வலம்புரி விநாயகர் கோவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 9ம் தேதி காலை 8 மணிக்கு மூத்த பிள்ளையார் வேள்வியும், 9 மணிக்கு பேரொளி வழிபாடும், 10.30 மணிக்கு சாமி கரிக்கோல ஊர்வலமும், மாலை 4 மணிக்கு நலத்தேவர் வழிபாடும், இரவு 8 மணிக்கு முதல் கால வேள்வியும், தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுட்சியும், 7.30 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், 8 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு மகா அபிஷேகமும் 9.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்கஏழுமலை, திருப்பணிக்குழு தலைவர் செல்வராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar