சேதுக்கரையில் உழவாரப்பணி : சேது சமுத்திர ஆரத்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2023 11:03
சேதுக்கரை: சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரை அருகே உள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த குப்பை கழிவுகள், கடலுக்குள் அகற்றப்படாத துணிமணிகள் ஆகியவற்றை இந்திய கடற்படை ஐ.என்.எஸ்., பருந்து அலுவலர்கள், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள், மாவட்ட ரெட் கிராஸ் அசோசியேசன், தர்ம ரக்க்ஷசண ஸமிதி உள்ளிட்ட சமூக நல ஆர்வலர்களால் உழவாரப்பணி நடந்தது.
கடற்கரைப் பகுதிகளில் பக்தர்கள் பயன்படுத்தக்கூடிய இடங்களில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றி தூய்மை செய்யும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். காலை 10:30 மணியளவில் ஆஞ்சநேயர் கோயில் முன்புறம் உள்ள படித்துறையில் 27 நட்சத்திரங்களுக்கும் தீப தூப ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சமுத்திர ஆரத்தியை முன்னிட்டு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் கரையோரத்தில் நடந்தது. உலக நன்மைக்கான கூட்டுப் பிரார்த்தனைகளும், மாசில்லாத நீர் நீர்நிலைகளை வைத்திருக்கவும் பிராத்திக்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமேஸ்வரம் ராமசேது மகா சமுத்திர தீர்த்த ஆரத்திக் குழுவினர் செய்திருந்தனர். பிரசித்தி பெற்ற சேதுக்கரையில் நடந்த ஆரத்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.