பதிவு செய்த நாள்
12
மார்
2023
07:03
கூடலூர்: கூடலூர், ஆமைக்குளத்தில், விடிய விடிய நடந்த கமன் கூத்து விழாவை, ஏறாளமான மக்கள் கண்விழித்து ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஆமைக்குளம் பகுதியில், ஆண்டுதோறும் மாசி மாதம் காமன் கூத்து விழா பாரம்பரிய முறைப்படி கொண்டாடி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து ரதி - மன்மதன் வேடமிட்டு இளைஞர்கள், வீடு வீடாக சென்று நடனமாடி வந்தனர். இதன், நிறைவு விழர், நேற்று முன்தினம், இரவு 8:00 மணிக்கு துவக்கியது. கலை நிகழ்ச்சிகளும், தொடக்கது, ரதி - மன்மதன் ஆட்டமும் நடந்து நள்ளிரவு 12:00 மணிக்கு ரதி - மன்மதன் ஊர்வலமாக தேவசபைக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அவர்கள் திருமணம், மொய் விருந்து உபச்சாரம் நிச்சிகள் நடந்தது. நள்ளிரவு, 2:00 மணிக்கு சிவபெருமான் தியானத்தில் அமரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து தூதுவன் வருகை, தட்சன் யாகம் நடந்தது. வீரப்பத்தின் வருக்கு பின் தட்சன், வதைப் படலம், அதிகாலை எமன் பாச கயிற்றுடன் வருகை, 5:45 மணிக்கு சிவப்பெருமான் நெற்றிக் கண்களால் மன்மதனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விடிய விடிய நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மூன்றாம் நாள் (நாளை) மன்மதன் உயிர்த்து எழுழும் நிகழ்ச்சி நடக்கிறது.