அவிநாசி: அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து கள ஆய்வு நடைபெற்றது.
அவிநாசி அடுத்த கருவலூரில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலங்கள் ஏராளம் உள்ளது. இதனை, ஹிந்து சமய அறநிலையத்துறை சர்வே குழுவினர்களால் அளவீடு செய்யப்பட்டு கோவில் நிர்வாகம் மூலம் எல்லை கற்கள் நடும் வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனை திருப்பூர் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் மகேஸ்வரன், நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் குழந்தைவேல் முன்னிலையில்,கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளந்து எல்லை கற்கள் நடும் பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது.