சுட்டெரிக்கும் வெயில் : ராமேஸ்வரத்தில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2023 01:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயில் நான்கு ரநவீதியில் வாகனங்கள் செல்ல தடை விதித்து உள்ளதால், பக்தர்கள் ரதவீதியில் நடந்து சென்று கோயிலில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, வெப்ப சலனக் காற்று வீசுகிறது. இதனால் உள்ளூர் பகுதி மக்கள் முன்பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வெளியில் செல்லும் நிலையில், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் ஒதுங்கி நிற்க கூட நிழல் தரும் பந்தல் வசதி இல்லாத நிலையில், ரதவீதியில் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஓடுகின்றனர். இதில் பெண்கள் முதியோர், குழந்தைகள் பெரிதும் பாதிக்கின்றனர். எனவே பக்தர்கள் நலன் கருதி, ரதவீதியில் உள்ள நடைபாதையில் வெயில் தாக்கத்தை தாங்க கூடிய கூலிங் வர்ணம் பூச கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.