பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யுகாதி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2023 09:03
பொள்ளாச்சி: கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொதுவாக யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதியிலேயே கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் ஒரு நாளிகை அமாவாசை திதி இருந்தாலும், அதற்கு அடுத்த நாளினையே கணக்கில் எடுத்துக் கொண்டு யுகாதி கொண்டாடப்படுகிறது. இன்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.