Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி ... திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குண்டத்து காலியாதேவி கோவிலில் குண்டம் விழா துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குண்டத்து காலியாதேவி கோவிலில் குண்டம் விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

22 மார்
2023
10:03

மேட்டுப்பாளையம்: குண்டத்து காளியாதேவி கோவிலில், அமாவாசை பூஜை நடந்தது. நேற்று பூச்சாட்டுடன் குண்டம் விழா துவங்கியது.

மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, காலை, 5:30 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு பூஜை  செய்யப்பட்டது. அதன் பின் மதியம் உச்சி கால பூஜை நடந்தது. முன்னதாக பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரர், காசி விஸ்வநாதர், கங்கை அம்மன், முருகர், கால பைரவர்,  விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமிகளுக்கு முதலில் பூஜைகள் செய்யப்பட்டன.  தைத் தொடர்ந்து குண்டத்து காளியாதேவி அம்மனுக்கு பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு  அபிஷேகம் செய்து, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகிய இருவரும் இணைந்து, பூஜைகள் செய்தனர். இதில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜை முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு, 7:00 மணிக்கு கோவிலின், 35ம் ஆண்டு குண்டம் விழா, பூச்சாட்டுடன் துவங்கியது. ஏப். 3ம்  தேதி அம்மன் அழைப்பும், 4ம் தேதி இரவு குண்டம் திறந்து தீ வளர்த்தலும், 5ம் தேதி காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும், அதைத் தொடர்ந்து அக்னி அபிஷேகம், அன்னதானம், பொங்கல்  வைத்தல், மஞ்சள் நீராடல் ஆகியவை நடைபெற உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar