ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் யுகாதி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2023 09:03
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் இன்று ஸம்வத்ஸராதி (தெலுங்கு வருடப் பிறப்பு) முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இன்று பங்குனி மாதம் 08ம் தேதி 22.03.2023 தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10.00 மணியளவில் புறப்பாடு கண்டருளி சந்தனு மண்டப ஆஸ்தானத்தில் எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளுகிறார். தொடர்நது மதியம் 2.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை பஞ்சாங்கம் வாசிக்கப்படுகிறது. பின்னர் ஸ்ரீநம்பெருமாள் சாளி (ஜாலி) அலங்காரம் கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சந்தனு மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணியளவில் புறப்பட்டு ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.