ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் மங்காங்குளத்தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
இதையொட்டி, கடந்த 6 ந்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 21 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் மகாராஜா பிறப்பு, கர்ணன் பிறப்பு, தர்மர், கிருஷ்ணர் பிறப்பு மற்றும் அம்மன் திருக்கல்யாணம் அல்லி திருக்கல்யாணம், அரவாண் களபலி, கர்ணமோட்சம் உள்ளிட்ட பல உற்சவங்கள் நடந்தது. தொடர்ந்து தீமிதி உற்சவம் நடந்தது. இதில்ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தீமித்துஅம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா தங்க.ஆனந்தன் மற்றும் மங்காங்குளத்தெரு பிரமுகர்கள் செய்திருந்தனர்.