கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி கங்கையம்மன் கோவிலில் 48 நாட்கள் மண்டல பூஜைகள் நேற்று துவங்கியது.
கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள கங்கையம்மன் கோவிலின் கும்பாபிேஷகம் நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி, தொடர்ந்து 48 நாட்கள் காலையில் கங்கையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நடக்கும் மண்டல பூஜைகள் நேற்று துவங்கியது. கங்கையம்மன் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை மங்கல பொருட்களால் அபிேஷகம் செய்கின்றனர். சிறப்பு அலங்காரங்களுக்குப் பின் 1,008 வரிகள் உள்ள சிறப்பு வாய்ந்த லலிதா சகஸ்ரநாம மந்திரங்கள் ஓதி பூஜை செய்கின்றனர். அலங்கார தீபம் காண்பிக்கப்படுகிறது. மண்டல பூஜைகள் கும்பாபிஷேகத்திற்குப் பின் நடத்துவதின் நோக்கம் குறித்து திருநாவலுார் முத்துசாமி சிவம் பக்தர்களுக்கு விளக்கினார். பூஜைகளை மணிகண்ட குருக்கள், வேதாச்சல சங்கரசிவம் ஆகியோர் செய்து வைக்கின்றனர். பூஜை ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.