பதிவு செய்த நாள்
27
மார்
2023
02:03
திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில், கூடலூர்குடிகாடு சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி நேற்றுமுன்தினம் வாஸ்துசாந்தி பூஜைகள் நடந்தது. நேற்று காலை விக்னேஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், அசனாம்பிக்கை உடனுறை வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. காலை 10மணிக்கு, கோவில் வளாகத்தில் இருந்த கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. ஏப்ரல் 1ம் தேதி திருக்கல்யாண உற்சவம், ஏப்ரல் 3ம் தேதி திருத்தேர்விழா, ஏப்ரல் 4ம் தேதி பங்குனி உத்திர விழா நடக்கிறது. இதேபோல் கூடலூர்குடிகாடு கிராமத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, பங்குனி உத்திரவிழா துவங்கியது. ஏப்ரல் 4ம் தேதி தேர்திருவிழாவும், ஏப்ரல் 5ம் தேதி பங்குனி உத்திர விழாவும் நடக்கிறது. இதேபோல் குமாரை பூமலையப்பர் கோவிலில், பங்குனி உத்திர பரிவேட்டை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.