பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 03:03
செஞ்சி: பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் பிரம்மேற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மேல்மலையனுார் அடுத்த பெருவளூர் கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று நேற்று முன்தினம் விநாயகள் உற்சவத்துடன் துவங்கியது. அன்று மாலை விநாயகர் மூழிக வாகனத்தில் கோவில் உலா நடந்தது. நேற்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோட்டீஸ்வரர், கோகிலாம்பாள், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 8 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து கொடியேற்றம் நடந்தது. இன்று இந்திர வாகனமும், நாளை (28 ம் தேதி) பூதவாகனமும், 29ம் தேதி நாகவாகனமும், 30ம் தேதி திருக்கல்யாண வைபவமும், ரிஷப வாகனத்தில் சாமி உலாவும், 31ம் தேதி யானை வாகனமும், ஏப். 1ம் தேதி முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது. 2ம் தேதி குதிரை வாகனமும், 3ம் தேதி பிரம்மோற்சவ நிறைவு விழாவும் நடக்க உள்ளது. நேற்று நடந்த கொடியேற்று விழாவில் விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.