கூடலூர்: கூடலூர், இரண்டாவது மைல் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் 41ம் ஆண்டு தேர்திருவிழா 24ம் தேதி காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும்; இரவு 9:00 மணிக்கு வேடன்வயல் ஆற்றிங்கரையில் இருந்து அம்மனை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம், காலை சிறப்பு பூஜைகளும், பகல் 12:00 மணிக்கு, வேடன்வயல் ஆற்றுங்கரையில் இருந்து பரவ காவடி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தி பங்கேற்றனர். மாலை 5.00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், தொடர்ந்து இரவு திருத்தேர் ஊர்வலமும் நடந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று, காலை 11:00 மணிக்கு கரகம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா ஊர்வரும் நடந்தது.