சனிபகவான் கோவில் யானை கோவில் குளத்தில் ஆனந்த குளியல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 04:03
காரைக்கால்: திருநள்ளார் சனிபகவான் கோவில் ப்ரக்குருதி யானை கோடைவெயில் தாக்கம் அதிகரித்து வரும்நிலையில் தினம் கோவில் குளத்தில் ஆனந்த குளியலில் ஈடுப்பட்டு வருகிறது.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு ஆசி வழங்கவும், விழாக்காலங்களில் சாமி புறப்பாடு சமயத்தில் உடன் செல்லவும் கோவில் நிர்வாகம் கடந்த 2011ம் ஆண்டு யானை வாங்கப்பட்டது.மேலும் தமிழக கோவில்களில் உள்ள யானைக்கு ஆண்டுக்கு ஒருமுறை புத்துணர்வு முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.இதனால் முக்கிய கோவில்களில் உள்ள யானைகள் மேட்டுப்பாளைய முகாமிக்கு யானைகள் சென்று வருகிறது.ஆனால் இதில் ஒருசில கோவில் யானைகள் தீடீர் என்று மதம் பிடித்து யானை பாகன்களை தாக்கும் நிலை ஏற்படுகிறது.இதனால் திருநள்ளார் சனிபகவான் கோவில் யானை நேரத்துக்கு உணவு,ஒய்வு மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிவழங்கி வருகிறது.இந்நிலையில் காரைக்காலில் கடந்த சிலநாட்களா வெயில் அதிகம் காணப்பட்டு வருகிறது.இதில் ஒருசில இடங்களில் தீடீர் என்று மழைபொய்கிறது.பின் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் சனீஸ்வபகாவன் கோவில் யானை தினம் கோவிலுக்கு அருகில் உள்ள சரஸ்வதி தீர்த்தக் குளத்தில் காலை,மாலை இருவேலை சுமார் ஒருமணி நேரம் ஆனந்த குளியலில் ஈடுப்பட்டு வருகிறது. குழந்தை போல் விளையாடும் காட்சி கவரும் வகையில் காணப்படுகிறது. பின் குளியல் முடிந்தப்பின் யானை குளம்கரையில் உள்ள விநாயகரை வணங்கிவிட்டு பின் கோவிலுக்கு செல்கிறது.இதனால் யானை விளையாடும் நிகழ்வை கண்டுகளிக்க பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை பலர் வருகின்றனர்.