குன்றக்குடியில் பங்குனித் உத்திர திருவிழா கொடியேற்றம். ஏப்.3 ஆம் தேதி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2023 04:03
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி வெள்ளிக்கேடகத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. ஏப்.1 ஆம் தேதி தங்கரதமும், ஏப்.2 ஆம் தேதி வையாபுரி தெப்பம் மற்றும் வெள்ளி ரதமும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.3 ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்.4 ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.