பாரத மாதா கோவிலுக்கு புனித நீர் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 11:03
கன்னியாகுமரி: நமது தாயகத்தின் தெய்வீகத் தன்மையையும், சிறப்புக்களையும் மனதிற் கொண்டு இதற்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்ற சங்கல்பத்துடனும், அகண்ட சம்பூர்ண பாரதமாகவும், விஸ்வ குருவாகவும் இந்தியா வலுப்பெற சென்னை அருகாமையில் 48 அடி உயரமும் 300 டன் எடையுள்ள கற்களைக்கொண்டு பாரத மாதா கோவில் கட்டப்பட்டு வருகிறது. இது சுவாமிஜி பிரம்ம யோகானந்தா தலைமையில், சீடர்களின் முயற்சியில் இந்த திருப்பணி இனிதே நிறைவேறிக் கொண்டு இருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு துவக்கிய இந்த முயற்சி வரும் மே மாதம் 5ம் தேதி நீலமங்கலம், சாஸ்திராலயத்தில் கும்பாபிஷேகம் செய்வித்து நிறைவேற இருக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சி அகில இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெறுகிறது.
கோபுர கலச பூஜை : கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பூஜையும், அதனைத் தொடர்ந்து விவேகானந்தா கேந்திரா ராமாயணம் அரங்கில் பூஜை மற்றும் சுவாமிஜியின் சத்சங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச் செயலாளர் காளியப்பன், மாவட்ட தலைவர் குமரேசதாஸ், மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், அய்யா வழி சமய சொற்பொழிவாளர் சிவச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.