பதிவு செய்த நாள்
18
செப்
2012
11:09
ஓசூர்: ஓசூர் நகரில் விநாயகர் சதூர்த்தியையொட்டி நகர வீதிகளில், விநாயகர் சிலைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. விநாயகர் சதூர்த்தி, நாளை (செப்., 19) கொண்டாடப்படுகிறது. ஓசூர் பகுதியில் விநாயகர் சதூர்த்தியையொட்டி சிறுவர்கள் முதல் பல்வேறு ஹிந்து அமைப்பினர், குடியிருப்பு பகுதியை சேர்ந்தோர், முக்கிய சாலை சந்திப்புகள், குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வருகின்றனர்.விநாயகர் சதூர்த்தியையொட்டி எம்.ஜி., சாலை, பெங்ளூரு சாலை, தாசில்தார் அலுவலக சாலை, பாகலூர் சாலைகளில் சாலைகள், வீதிகளில் சிறு, சிறு விநாயகர் சிலைகள் முதல் பெரிய வகை விநாயகர் சிலைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.சிறு சிலைகள், 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையும், பெரிய சிலைகள், 5,000 ரூபாய் முதல் 15,000 ரூõபய் வரையும் விற்பனைக்காக பல்வேறு வடிவங்களில், விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஹிந்து முன்னனி உள்ளிட்ட பெரிய அமைப்பினர், வெளிமாநிலங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சிலைகளை வாங்கி வைத்து வருகின்றனர். வீதிக்கு வீதி, சாலைக்கு சாலை விநாயகர் சிலைகள் விற்பனைக்கு அடுக்கி வைப்பட்டுள்ளதால், அவற்றை வாங்க பொதுமக்கள் நான்கு கர வாகனங்களுடன் அலைமோதுவதால், நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.