சின்ன சேனியம்மன் கோவிலில் தீச்சட்டி திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 03:03
வண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை சின்ன சேனியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை, வண்ணாரப்பேட்டை, சிங்காரத் தோட்டத்தில் சின்ன சேனியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் 37ம் ஆண்டு திருவிழா, இம்மாதம், 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, 21ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது. 26ம் தேதி பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னி சட்டி திருவிழா நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று மாலை நடக்கிறது.