மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 04:03
மானாமதுரை: மானாமதுரை தயாபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நேற்று தீர்த்த வாரியுடன் நிறைவு பெற்றது.
மானாமதுரை தயாபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இந்தாண்டிற்கான விழா கடந்த 15ம் தேதிகாப்பு கட்டுதலுடன் துவங்கியதையடுத்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.கடந்த 24ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூசாரி சுப்பிரமணியன் தலைமையில் வைகை ஆற்றிலிருந்து தீச்சட்டிகள், பால்குடங்கள்,ஆயிரங்கண் பானை பூ கரகம், எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக வலம் வந்து கோயில் முன்பாக பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர்.நேற்று முன்தினம் சிப்காட் ஜிப் ஆலை தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற மண்டகப்படியில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன.நேற்று தீர்த்தவாரியுடன் பங்குனி பொங்கல் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன்,முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.