திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 04:03
நாகர்கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. காலை 9:00 மணிக்கு தந்திரி சஜித் சங்கர நாராயணரரு கொடியேற்றினார். 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., ஐந்தாம் தேதி மாலை 5:30 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் மூவாற்று முகம் ஆற்றுக்கு எழுந்தருளி இங்கு ஆராட்டு முடிந்து கோயில் திரும்பியதும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.