கொட்டாம்பட்டி வடக்குபுற காளியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 04:03
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வடக்குபுற காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் கோயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கோழி மற்றும் கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து கொட்டாம்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் வீடுகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட முளைப்பாரியை கோயிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (மார்ச் 28) மாலை கோயிலில் வைக்கப்பட்டுள்ள முளைப்பாரியை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று பாண்டாங்குடியில் உள்ள பூசத்தாய் ஊருணியில் கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.