பதிவு செய்த நாள்
18
செப்
2012
11:09
திருவள்ளூர்: மாவட்டத்தில் ஏற்கனவே அறிவித்த, 14 நீர் நிலைகளுடன், கூடுதலாக காக்களூர் மற்றும் பழவேற்காடு ஏரிகளிலும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி சாலை குளம், வண்ணான்குளம், கரீம்பேடு குளம், பாண்டரவேடு குளம், பராசக்தி நகர் குளம் மற்றும் கனகம்மாசத்திரம் குளம் ஆகிய நீர் நிலைகளில் வரும், 23ம் தேதி மாலை 3 மணிக்கும், எம்.ஜி.ஆர்., நகர் ஏரி, கூவம் ஏரி, திருமழிசை குளம், ஊத்துக்கோட்டை குளம், சித்தேரி, கொற்றலை ஆறு ஏழு கண் பாலம், பக்கிங்காம் கால்வாய், பழவேற்காடு ஏரி மற்றும் காக்களூர் ஏரி ஆகிய நீர் நிலைகளில், அன்று மாலை 4 மணிக்கும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப் படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.