பதிவு செய்த நாள்
18
செப்
2012
11:09
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நேற்று துவங்கியது.உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூரில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரம்மோற்சவம் விமர்சையாக நடக்கிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று (17ம் தேதி) துவங்கியது.அதையொட்டி காலை 6 மணிக்கு திருப்பல்லாக்கு நடந்தது. பகல் 12 மணிக்கு விசேஷ திருமஞ்சன ததியாராதனமும், இரவு ஹம்ச வாகனத்தில் சாமி ஊர்வலமும் நடந்தது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருமஞ்சனம் மற்றும் இரவு பல்வேறு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. இன்று (18ம் தேதி) சந்திர பிரபை, 19ம் தேதி ஹனுமந்த் வாகனம், 20ம் தேதி சேஷ வாகனத்தில் சாமி வீதியுலா நடக்கிறது.21ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பல்லக்கில் பெருமாள் நாச்சியார் திருக்கோல சேவை விசேஷ திருமஞ்சன ததியாராதனமும், இரவு தங்க கருட வாகனத்தில் சாமி விதியுலா, 22ம் தேதி காலை 8 மணிக்கு திருப்பல்லக்கு மதாதிவண் சடகோப சுவாமி திருவீதி புறப்பாடும், பகல் 1 மணிக்கு மங்களா சாசனம் விசேஷ திருமஞ்சனம், இரவு யானை வாகனத்திலும், 23ம் தேதி காலை 11 மணிக்கு சூர்ணேசத்வசம் சர்வ பூபால விமானம் விசேஷ திருமஞ்சனம், மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம், இரவு புஷ்ப பல்லக்கில் சாமி வீதியுலா நடக்கிறது.24ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பல்லக்கு பெருமாள் வெண்ணை தாழிசேவை விசேஷ திருமஞ்சனம், இரவு வேடுபரி குதிரை வாகனத்திலும், 25ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் ரதாரோஹனம் ரதோத்சவம், பெருமாள் தேரிலிருந்து புறப்பாடும் 11 மணிக்கு பத்தி உலாத்துதல் திருமஞ்சனம் நடக்கிறது.26ம் தேதி காலை 8 மணிக்கு நிகமாந்த மஹா தேசிக சுவாமி திருவீதி புறப்பாடு பெருமாள் மங்களாசாசனம், மாலை 5 மணிக்கு கடம் புறப்பாடு ஆராதனம், 27ம் தேதி விடையாற்றி உற்சவம், 28ம் தேதி காலை 9 மணிக்கு தேசிகர் சாமிக்கு திருமஞ்சனம், மாலை 4 மணிக்கு சந்திரபிரபை வாகனத்தில் ஸ்ரீநிகமாந்த மகாதேசிகர் வீதியுலாவும் நடக்கிறது.