தேவகோட்டை: தேவகோட்டை சாமியாடி பெரியகருப்பன் தெருவில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் பங்குனி உற்சவ விழா 21 ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. எட்டு தினங்கள் தினமும் சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து வெவ்வேறு அம்பாள்களின் சிறப்பு தோற்றங்களில் அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் மாலை அம்மன் கரகம் எடுத்து வீதி உலா வந்து பூஜைகளும், பக்தர்கள் முளைக்கொட்டியும் வழிப்பட்டனர்.சுமங்கலி பூஜை நடந்தன. அகனிச் சட்டி. எடுத்துவந்து வழிபட்டனர். நிறைவு நாளான நேற்று காலை பக்தர்கள் கைலாசவிநாயகர் கோவிலிலிருந்து பால்குடம், ரதக்காவடி, வேல்காவடிகள் எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பாலாபிஷேகம் செய்யப்பட்டு மாரியம்மன் வெள்ளி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.