கூடலுார்: தமிழக கேரள எல்லை குமுளி மலைப்பாதையில் அமைந்துள்ள வன காளியம்மன் கோயிலில் உற்சவ திருவிழா நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தர் தலைமையேற்று அன்னதானத்தை துவக்கி வைத்தார். மதுரை கோட்டபொறுப்பாளர் கணேசன், தேனி மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சசி, தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா, சின்னமனூர் நகரத்தலைவர் சுந்தர், கூடலுார் ஹிந்து முன்னணி பொதுச் செயலாளர் ஜெகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.