பதிவு செய்த நாள்
29
மார்
2023
11:03
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் மற்றும் சனிப்பெயர்ச்சி யாக பெருவிழா நேற்று துவங்கியது.
பொள்ளாச்சி சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம், திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை மற்றும் பொள்ளாச்சி ஆர்ஷ வித்யா பீடம் சார்பில், திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் மற்றும் சனிப்பெயர்ச்சி யாக விழா, ஜோதிநகர் அருள்ஜோதி மண்டபத்தில் நேற்று துவங்கியது.
தருமபுரம் ஆதினம், திருக்கயிலாயபரம்பரை ஆதினம், ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமஹா சன்னிதானம் மாசிலாமணி ஞானசம்பந்த பராமச்சாரிய ஸ்வாமிகள், ரிஷிகேஷ் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம் தலைவர் பூஜ்யஸ்ரீ சாக் ஷாத் க்ருதாநந்த சரஸ்வதி சுவாமிகள், அவிநாசி ஆதினம் காமாட்சி தாச சுவாமிகள், ஆர்ஷ வித்யா பீடம் ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள், ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம் ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், அருளாசி வழங்கி பேசினர். திருச்சிற்றம்பலம் திருவாசக சித்தர் சிவ தாமோதரனின், திருவாசக நீத்தல் விண்ணப்பம் இசை சொற்பொழிவு நடந்தது. அதில், திரளான பொதுமக்கள் பங்கேற்று சொற்பொழிவை கேட்டனர். இன்று, காலை, 9:00 மணிக்கு சனிப்பெயர்ச்சி யாக விழா மற்றும் சுவாமிஜி அருளாசி வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.