தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 84 ரூபாய்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2023 11:03
சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ அருள்மிரு தில்லைக்காளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 84 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்விழி ஆகியோர் முன்னிலையில் நேற்று கோயில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 84 ரூபாய் கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 19-கிராம். வெள்ளி 49 கிராம் கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி மலேசிய பணம் 14 ரூபாயும், கனடா ஒரு டாலர், ஸ்ரீலங்கா 100 ரூபாயும், திராம்ஸ் பத்து ரூபாயும், சிங்கப்பூர் டாலர் பத்து ரூபாய், அமெரிக்க டாலர் 15 ரூபாயும் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டது.