வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், ரூ.42.93 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது. முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், உண்டியல் எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில், உண்டியலில், 42 லட்சத்து 93 ஆயிரத்து ஆயிரத்து 362 ரூபாயும், 59 கிராம் 800 மில்லி கிராம் தங்கமும், 1 கிலோ 671 கிராம் 500 மில்லி கிராம் எடையுள்ள வெள்ளியும், 2 கிலோ 900 கிராம் எடையுள்ள பித்தளையும், பக்தர்கள் காணிக்கையாக இருந்தது. உண்டியல் எண்ணும் பணியை அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி, உதவி கமிஷனர் விஜயலட்சுமி ஆகியோர் மேற்பார்வையிட்டனர். உண்டியல் என்னும் பணியில் பக்தர்களும், கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.