சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் 4 உண்டியல்கள் நேற்று திறந்து எண்ண ப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் மாணவர்கள், கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர். மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 330 ரூபாய் பணமும், 29 கிராம் தங்கம், 48 கிராம் வெள்ளியும் இருந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், ஆய்வாளர் சுகன்யா, தேவஸ்தான மேலாளர் இளங்கோ சூப்பிரண்டு தன்னாயிரம், முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி உள்ளிட்டோர் உண்டியல் எண்ணும் பணியை பார்வையிட்டனர். இதற்கு முன்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.