பதிவு செய்த நாள்
01
ஏப்
2023
06:04
பெரியகுளம்: சில்வார்பட்டியில் முனையடுவநாயனார் கோயில் குருபூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் மிகப் பழமையான முனையடுவநாயனார் கோயில் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் சில்வார்பட்டியில் 63 நாயன்மார்களில் ஒருவரான முனையடுவ நாயனாருக்கு தனி கோயில் உள்ளது அம்சமாகும். பங்குனி மாதம் பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு முனையடுவநாயனாருக்கு குரு பூஜை நடந்தது. முன்னதாக கோயிலில் விநாயகர், அதிகாரநந்தி, காசிவிஸ்வநாதர், நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஞ்சள் பொடி, மா பொடி, திருமஞ்சன திரவியம், பால், தேன், பன்னீர், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. சிவனடியார்கள், முனையடுவநாயனார் வாழ்க்கை வரலாறு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.