கைலாசநாதர் கோவிலில் பிரமோற்சவ விழா சகோபுர வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2023 06:04
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 26ம் தேதி பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து ரிஷபகொடி ஏற்றப்பட்டது பின் விநாயகர் சுப்ரமணியர்,கயிலாசநாதர், சுந்தாம்பாள் சண்டிகேஸ்வரர். அஸ்திரவேதர் புறப்பாடு நடந்தது. கடந்த 28ம் தேதி கயிலாசநாதர் பூதவாகனத்தில்,29ம் தேதி யானை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. நேற்று முன்தினம் ஸ்ரீகயிலாசநாதர் வெள்ளி ரிஷபத்தில் பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 1ம் தேதி திருக்கல்யாண உத்ஸ்வம்.3ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது வரும் 6ம் தேதி தெப்ப திருவிழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலக்குழுவினர் தலைவர் வெற்றிச்செல்வம். துணைத்தலைவர் புகழேந்தி, பொருளாளர் சண்முகசுந்தரம். உறுப்பினர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.