மயிலம்: மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி, வெள்ளி நாக வாகன உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனை மற்றும் வழிபாடும் நடந்தது. 9:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 12:00 மணிக்கு மூலவருக்கு தங்கக்கவச அலங்காரம் நடந்தது. இரவு 8:30 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி கிரிவலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். வரும் 4ம் தேதி காலை 6:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் செய்து வருகிறார்.