வேட்டுவபாளையம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2026 10:10
அவிநாசி: அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் எழுந்துருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நாளை நடைபெறுகிறது.
அவிநாசி அடுத்த வேட்டுவ பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் 2026ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 18ம் தேதி பொட்டுசாமி பொங்கல் விழாவுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சாமி சாட்டுதல், கொடி கட்டுதல், குண்டம் திறக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. நாளை (புதன்)அம்மை அழைத்தலைத் தொடர்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா, மாவிளக்கு ஊர்வலம் ஆகியவை நடைபெறுகிறது. நாளை மறுநாள்(வியாழன்) மறுபூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.