வால்பாறை: வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாதம் கிருத்திகை நாளான இன்று வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை, 5:30 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு பால், இளநீர், பன்னீர், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. அதன்பின், காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.