திருப்பதி கோவில் முன் ‘ரீல்ஸ்’: சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு. .தேவஸ்தானம் நடவடிக்கை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2026 01:10
திருமலை, திருமலை ஸ்ரீவாரி கோவில் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ எடுத்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பணியில் அலட்சியமாக இருந்த ஊழியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) இந்தச் சம்பவத்துக்குத் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளது. கோவில் முன்பாக நடனமாடி காணொளி பதிவு செய்தவர்களுக்கு எதிராக திருமலை ஐ-டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமலை கோவில் வளாகத்திலும், மாட வீதிகளிலும் ‘ரீல்ஸ்’ உள்ளிட்ட காணொளிகளைப் பதிவு செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலின் புனிதத்தன்மையைப் பாதிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. மேலும், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் பணியில் அலட்சியமாக இருந்த ஊழியர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு வேண்டுகோள்: திருமலையின் புனிதத்தன்மையையும் வழிபாட்டு மரபுகளையும் பாதுகாக்க அனைத்து பக்தர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.